இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு வலுவானது? ஊடகவியலாளர் கேள்விக்கு கனடா பிரதமர் கொடுத்த பதில்
TARGET TRAVEL AGENCY MOHAMED ASIQUE இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு வலுவானது? ஊடகவியலாளர் கேள்விக்கு கனடா பிரதமர் கொடுத்த பதில் கனடாவில், கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக எவ்வளவு வலுமான ஆதாரம் உள்ளது என கேட்கப்பட்ட கேள்விக்கு கனடா பிரதமர் நேரடியாக பதிலளிக்கவில்லை. கனடா இந்தியா உறவில் விரிசல் G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்குச் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல், தூதரக அதிகாரிகளுக்கெதிரான வன்முறை முதலான விடயங்கள் குறித்துப் பேச, கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. நாடு திரும்பிய ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, கனடாவிலிருந்து வெளியேற கனடா உத்தரவிட்டது. கனடா இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றி...






